Sunday 7 September 2014

பேபால் கணக்கு துவங்க

குறிப்பு : நமது இந்திய நாட்டில் பேபால் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
பேபால் (Paypal) கணக்கை துவங்குவது எப்படி?
Paypal Account தொடங்குவது மிக எளிதான ஒன்று தான். உங்களிடம் முறையான
வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்.
கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.
பேபால் கணக்குத் துவங்க Paypal.comஎன்ற முகவரிக்கு செல்லவும்.
அதில்
signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவையான
விபரங்களைக் கொடுக்கவும்
step 1
clike signup



பேபால் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
1.E-Mail address:பேபால் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்காக செயல்படுகிறது
அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர்  என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக  பயன்படுத்துகிறோம்,  ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின்  முழுப் பெயர் (எ.கா : என்னுடைய பெயர் Jayakanthan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: G ).
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில்  உங்களுக்கு நமது நாட்டில்  ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய  பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் – நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின்  PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யுங்கள் . உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான்  கார்டு இருக்க வேண்டும்.
அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள  ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது பேபால் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.
Pan Card Number Verification
பேபால் தளத்தில் லாகின் செய்த பிறகு Profile என்பதை க்ளிக் செய்யுங்கள். My personal info என்பதில் PAN என்பதை தேர்வு செய்து அதில் உங்களுடைய Pan Card Number ஐ Enter செய்யுங்கள். இப்போது Continue பட்டனை க்ளிக் செய்யுங்கள். பின்பு ஒரிரு நாட்களில் உங்களுடைய Pan Number சரிபார்க்கப்பட்டுவிடும். ஒரு சில நேரத்தில் PAN Number ஐ Submit செய்த அடுத்த வினாடியே சரிபார்க்கப்பட்டுவிடும்.


பேபால் இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான்  இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.
.purpose code ( நோக்க குறியீட்டு எண் )
Purpose Code என்பது நீங்கள் எந்த நோக்கதிற்காக பேபால் கணக்கு தொடங்கினீர்கள் என்பதை குறிப்பதாகும். நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பவர் என்றால் "Advertising and market research" என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு Profile பகுதியில் My money என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் Purpose Code என்பதை க்ளிக் செய்து அதில் "Advertising and market research" என்பதை தேந்தெடுங்கள். அவ்வளுதான் வேலை முடிந்துவிட்டது.




பேபால் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி 



உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select 
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும் 





Name On Account:  உங்களின் பேபால்  கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.
Bank Name: அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்

உதாரணத்திற்கு பூர்த்தி செய்யபட்ட படிவம் பின்வருமாறு இருக்கும்




இப்போது உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை சரியாக Enter செய்யுங்கள். Enter செய்துவிட்டு Confirm என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பேபால் தளமானது உங்களுடைய வங்கி கணக்கை உறுதி செய்துகொள்ள இரண்டு சிறிய பண பரிவர்த்தனைகளை நிகழ்த்தும். (எ.கா Rs.1.20 மற்றும் Rs.1.30). அந்த இரண்டு சிறிய தொகையினை 3 லிருந்து 4 நாட்களுக்குள் உங்களுடைய வங்கி கணக்கில் நீங்கள் பார்க்கலாம்.



 பின்பு அந்த தொகையினை பேபால் தளத்தில் Submit செய்து உங்களுடைய வங்கி கணக்கை உறுதி செய்துகொள்ளுங்கள். Submit செய்வதற்கு வழக்கம்போல் பேபால் தளத்தில் லாகின் செய்யுங்கள். பிறகு Profile என்ற பகுதியில் Link/Edit Bank Account என்பதை தேர்ந்தெடுங்கள். பின்பு Confirm Bank Account என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது அந்த இரண்டு சிறிய தொகையினை Type செய்து OK கொடுங்கள். அவ்வளுதான் உங்களுடைய வங்கி கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் நீங்கள் பேபால் வழியாக பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு எளிதில் கொண்டு வரலாம்


No comments: